• Download mobile app
28 Jan 2026, WednesdayEdition - 3640
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்தியன் 2 படத்தின் நாயகி இவர் தான் அதிகாரப்பூர்வ தகவல்!

December 3, 2018 தண்டோரா குழு

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து 22 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி வெற்றிகரமாக ஓடிய இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் இப்போது தயாராகிறது. ரஜினியின் ‘2.0’ படத்துக்கு பிறகு இயக்குநர் ஷங்கர், ‘இந்தியன்’ படத்தின் 2-ஆம் பாகத்தை எடுக்கவுள்ளார்.

லைக்கா நிறுவனம் தயாரிப்பில் உருவாக உள்ள இப்படத்திலும் கமல்ஹாசன் முதியவராகவும், இளமை தோற்றத்திலும் இரு வேடங்களில் நடிக்கிறார். இப்படத்திற்கு ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார், டி.முத்துராஜ் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகவிருக்கும் இந்த படத்துக்கான பிரம்மாண்ட செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஷூட்டிங்கை வருகிற டிசம்பர் 14-ஆம் தேதி தொடங்கத் திட்டமிட்டுள்ளனர்.

பொள்ளாச்சியிலும் பெரும்பகுதி படப்பிடிப்பு நடக்கிறது. அரங்குகள் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடக்கிறது. இதில் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிப்பதாக தகவல் வெளியாகி பெரிதும் பேசப்பட்டது.

இந்நிலையில், காஜலே நேற்று நடந்த ‘கவச்சம்’ எனும் தெலுங்கு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இதனை உறுதிபடுத்தியுள்ளார். தமிழ் திரையுலகம் அல்லாது தென்னந்திய சினிமாவில் பெரிதும் வலம் வருபவர் காஜல் அகர்வால் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க