• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தண்ணீர் தொட்டியில் விழுந்த குட்டி யானை 3 மணி நேர போரட்டத்திற்கு பின் மீட்பு

September 9, 2016 தண்டோரா குழு

கோவை பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த நாய்க்கன்பாளையம் ராய ஊத்துப்பதி கிராமத்தில் உள்ள யானைகளுக்கான தண்ணீர் தொட்டியில் 4 வயது மதிக்கத்தக்க ஆண் குட்டி யானை தவறி விழுந்தது. சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு ஜேசிபி இயந்திரம் மூலம் தண்ணீர் தொட்டியை உடைத்து பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினர் யானைக்குட்டியை மீட்டனர்.

கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட நாயக்கன்பாளையம் ராயர் ஊத்துபதி கிராமத்தில் இன்று அதிகாலை 5 மணியளவில் 9 காட்டு யானைகள் வந்துள்ளது. அவைகள் அங்குள்ள ரோஸ்கார்டன் என்ற தனியார் தோட்டத்தில் யானைகள் தண்ணீர் குடிப்பதற்காக கட்டப்பட்டிருந்த தொட்டியில் தண்ணீர் குடிக்க வந்துள்ளது.

தொட்டியில் தண்ணீர் குறைவாக இருந்ததால் இறங்கி குடிக்க முற்பட்ட 4 வயது ஆண் குட்டி யானை தவறி 10 அடி ஆழமுள்ள தண்ணீர்  தொட்டிக்குள் விழுந்துவிட்டது. உடனிருந்த மற்ற யானைகள் அதை மீட்க போராடியபோது ஏற்பட்ட யானைகளின் சத்தம் கேட்டு அப்பகுதி பொதுமக்கள் பெரியநாயக்கன்பாளையம் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்து அங்கிருந்த மற்ற யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். தொடர்ந்து கோவை வன அலுவலர் பெரியசாமி மற்றும் மருத்துவர் மனோகரன் அறிவுறுத்தலின் பேரில் யானைக்குட்டியை மீட்க ஜே.சி.பி இயந்திரத்தைக் கொண்டு தண்ணீர் தொட்டியின் ஒரு பகுதியை இடித்து யானைக்குட்டி வெளியே கொண்டு வர முயற்சி மேற்கொண்டனர்.

சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு குட்டி யானை வெளியே வந்து வனப்பகுதிக்குள் சென்று கூட்டத்துடன் இணைந்தது. இது குறித்து கோவை வன அலுவலர் பெரியசாமி கூறும்போது யானைக்குட்டியை மனிதர்கள் கைகளால் தொட்டு தூக்கினால் மனிதர்களின் வாடையைக் கண்டு அந்த குட்டி யானையை தாய் யானை தன்னுடன் சேர்த்துக் கொள்ளாது எனவே யானைக்குட்டியை மீட்க வனத்துறையினரை ஜேசிபி இயந்திரத்தை பயன்படுத்த அறிவிறுத்தினோம் என தெரிவித்தார்.

மேலும் படிக்க