• Download mobile app
08 Feb 2026, SundayEdition - 3651
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஏ.ஆர்.முருகதாஸுக்கு ஆதரவாக நடிகர் கமல் டுவீட் !

November 28, 2018 தண்டோரா குழு

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான படம் சர்கார்.சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான இப்படம் நவம்பர் 6-ஆம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸானது.இப்படம் வசூல் ரீதியாக நல்ல சாதனை படைத்தது.ஆனால்,இந்த படத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவையும் இலவச பொருட்களை கொச்சைபடுத்தும் விதமாகவும் காட்சிகள் இருப்பதாக கூறி அ.தி.மு.க-வினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.அதுமட்டுமின்றி,பல தியேட்டர்களில் சர்கார் படத்தின் பேனர்களை அ.தி.மு.க-வினர் கிழித்து போராட்டம் நடத்தினார்கள்.

இதனையடுத்து,சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டது.இதற்கிடையில்,முன் ஜாமீன் கேட்டு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.பின்,அவரை கைது செய்ய நவம்பர் 27ம் தேதி வரை இடைக்காலத்தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில்,நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது,ஏ.ஆர்.முருகதாஸுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது.’சர்கார்’ படத்தில் அரசுத் திட்டங்களை விமர்சித்ததற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்.மேலும்,எதிர்காலத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படங்களில் அரசை விமர்சிப்பது போன்ற காட்சிகள் அமைக்க மாட்டேன் என்று உத்தரவாதப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது.இதனால் சர்கார் விவகாரம் மீண்டும் சூடுபிடித்தது.இந்நிலையில்,ஏ.ஆர்.முருகதாஸுக்கு ஆதரவாக நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.

மேலும் படிக்க