தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால்.வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்,ஜீவா,வெண்ணிலா கபடிக் குழு, முண்டாசுப்பட்டி,இன்று நேற்று நாளை எனப் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ராட்சசன் திரைப்படமும் மாபெரும் வெற்றி பெற்றது.
விஷ்ணு விஷால் கடந்த 2011-ல் நடிகரும்,இயக்குநருமான கே.நட்ராஜ் மகள் ரஜினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இதையடுத்து,இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது.எனினும்,சில மாதங்களாக கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருந்த நிலையில்,இருவருக்கும் நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது. அதை போல்,இயக்குனர் ஏ.எல் விஜயை விவாகரத்து செய்த பின்னர் நடிகை அமலாபால் பல படங்களில் நடித்துள்ளார்.
அவர் தற்போது “ஆடை,அதோ அந்த பறவை போல” உள்ளிட்ட படங்களில் நடித்து வருகின்றார்.இதற்கிடையில் ‘ராட்சசன்’ படத்தில் விஷ்ணு விஷால்,அமலாபால் இணைந்து நடித்திருந்தனர்.இருவரும் முதல் திருமண விவாகரத்து பெற்றுள்ள நிலையில்,இவர்கள் மறுமணம் செய்ய உள்ளதாக செய்திகள் பரவின.
இந்நிலையில்,இந்த செய்தியை குறிப்பிட்டு நடிகர் விஷ்ணு விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில்,
“என்ன ஒரு அபத்தமான செய்தி தயவு செய்து பொறுப்புடன் செயல்படுங்கள்.நாங்களும் மனிதர்களே எங்களுக்கும் வாழ்க்கை குடும்பம் உள்ளது.எழுத வேண்டும் என்பதற்காக எதையும் எழுதாதீர்கள் என்று கட்டமாக பதிவிட்டுள்ளார்”.
.
கோவையில் தேசிய அளவிலான மிகப்பெரும் குதிரையேற்ற லீக் போட்டி 3 நாட்கள் நடைபெறுகிறது
‘புதிய வேளாண் காடுகள் விதிகள்’ – நம் மண்ணைக் காக்கும் பெரும் சீர்திருத்தம் என சத்குரு வரவேற்பு
” ஷேமா கிசான் சாத்தி “திட்டத்தை வழங்குவதற்கு கரூர் வைசியா பேங்க் மற்றும் ஷேமா ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் கூட்டாண்மை
கோவை பிஎஸ்ஜி மருத்துவமனை மருத்துவர்கள் தினத்தை கொண்டாடியது
கதைகள் நன்றாக இருந்தாலே படத்தை தானாக மக்கள் அங்கீகரிப்பார்கள் – நடிகர் அருண் பாண்டியன்
தென்னிந்தியாவில் தனது வணிக நெட்வொர்க்கை மேலும் விரிவுபடுத்துகிறது ஆர்.எஸ்.டபிள்யூ.எம். நிறுவனம்