• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குத்துசண்டையில் 6 வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று மேரி கோம் புதிய உலக சாதனை!

November 24, 2018 தண்டோரா குழு

உலக மகளிர் சாம்பியன்ஷிப் போட்டியில் 6 வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று மேரி கோம் புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்று வரும் உலக மகளிருக்கான குத்துச்சண்டை போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த பெண் குத்துசண்டை வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.
அப்போடிகளின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.

இதில் லைட் பிளைவெயிட்’ 48 கி.கி எடைப்பிரிவு இந்தியாவின் மேரி கோம் மற்றும் உக்ரைனின் ஹன்னா ஒகோடாவை எதிர்கொண்டார். ஆரம்பம் முதலே அபாரமாக செயல் பட்ட மேரி கோமிற்கு ஈடுகொடுக்க முடியாமல் அவரை எதிர்த்த ஹன்னா ஒகோடா திணறினர், பின்னர் 3 சுற்றுகள் கொண்ட போட்டியில் 5-0 என்ற கணக்கில் இந்தியாவின் மேரிகோம் அபாரமாக வெற்றி பெற்று தங்கத்தை கைப்பற்றினார்.

இன்றைய போட்டியில் தங்கம் வென்றதன் மூலம் 6வது முறையாக சாம்பியன் பட்டம் பெற்று உலக வரலாற்றில் மேரிகோம் புதிய சாதனை படைத்துள்ளார்.

மேலும் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் அதிக தங்கப் பதக்கம் வென்ற வீராங்கனை என்ற சாதனை மேரி கோம் படைத்தார். இதற்கு முன்பாக அயர்லாந்தின் காடி டெய்லர் ஐந்து தங்கம் வென்றதே சாதனையாக இருந்தது. இவர் அந்த சாதனையை முறியடித்துள்ளார்.

மேலும் படிக்க