• Download mobile app
21 Jun 2026, SundayEdition - 3784
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கஜா புயலுக்கு நிவாரணம் வழங்கியுள்ள நடிகர் விஜய்

November 20, 2018 தண்டோரா குழு

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது ரசிகர்கள் மூலம் உதவிக்கரம் நீட்டியுள்ளார்.கஜா புயலின் கோரத்தாண்டவத்தில் நாகை மாவட்டம், நாகப்பட்டினம்,வேதாரண்யம்,தலைஞாயிறு,கீழையூர்,கீழ்வேளூர் வட்டாரப்பகுதிகள் கடுமையான சேதத்துக்கு உள்ளாகியுள்ளன.இதுவரை இல்லாத அளவில் கிராமப்புற மக்கள்,விவசாயிகள்,மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.விவசாயிகளின் 20 ஆண்டுகால உழைப்பையும் நாசம் செய்துள்ளது இந்தப் புயல்.மக்களின் வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கஜா புயலின் கோரத்தாண்டவத்துக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் தஞ்சை,நாகை,திருவாரூர் மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. இப்புயலின் தாக்கத்தால் 1 லட்சத்து 70 ஆயிரம் மரங்களும்,1 லட்சத்து 17 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் சேதம் அடைந்து இருக்கின்றன.புயல் மற்றும் கனமழை காரணமாக இதுவரை 45 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் 56,942 குடிசை வீடுகள் முழுமையாகவும் 3,404 குடிசை வீடுகள் பகுதியாகவும்,30,328 ஓட்டு வீடுகளும் சேதமடைந்துள்ளன.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலரும் நிவாரணப் பொருட்களையும், நிதியுதவியையும் அளித்து வருகின்றனர். மக்களுக்கு தேவையான அணைத்து உதவியும் செய்து வருகின்றனர்.அந்த வகையில் நடிகர் விஜய் சேதுபதி,சிவகார்த்திகேயன்,ரஜினிகாந்த்,நடிகர் சிவகுமார் குடும்பம் உட்பட பலரும் நிவாரண பொருட்களை அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில்,தற்போது நடிகர் விஜய் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இருக்கும் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தி நிவாரண பணிகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க