• Download mobile app
15 Mar 2026, SundayEdition - 3686
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மிஷ்கினால் சூப்பர் டீலக்ஸ் படத்தில் இருந்து விலகிய நதியா – ஏன்?

November 17, 2018 தண்டோரா குழு

ஆரண்ய காண்டம் படம் மூலம் இந்திய அளவில் கவனிப்பை பெற்றவர் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா.இந்த படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதை பெற்ற இவர்,7 ஆண்டுகளுக்கு பிறகு இயக்கியிருக்கும் படம் சூப்பர் டீலக்ஸ்.

படத்தில் ஷில்பா என்னும் திருநங்கை வேடத்தில் விஜய்சேதுபதி நடிக்கிறார்.சமந்தா வேம்பு என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.மேலும் பகத் பாசில்,ரம்யா கிருஷ்ணன்,மிஷ்கின்,காயத்ரி,பகவதி பெருமாள் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

இந்த படத்தில்,ரம்யா கிருஷ்ணன் நடிக்க இருந்த கதாப்பாத்திரத்தில் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டவர் நடிகை நதியா தான்.சில நாட்கள் படப்படிப்பிலும் கலந்து கொண்ட அவர் திடீரென்று விலகியுள்ளார்.இந்நிலையில் இதற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது.

படத்தில் மிஷ்கினை,நதியா கன்னத்தில் அறைவது போன்ற ஒரு காட்சி இரண்டு நாட்கள் படமாக்கப்பட்டதாகவும்,காட்சி யதார்த்தமாக வர வேண்டும் என்பதற்காக மிஷ்கின்,தன்னை நிஜமாகவே அடிக்குமாறு நதியாவிடம் கூறியுள்ளார்.இதனால் நதியா மிஷ்கினை நிஜமாகவே அடித்துள்ளார்.எனினும்,56 முறை டேக் போகியும் அந்த சீன் சரியாக வரவில்லையாம்.

இதனால் கோபமடைந்த மிஷ்கின் மிகவும் கோவமாக “இனிமேல் நதியாவிடம் அடிவாங்கி நடிக்க மாட்டேன்.அவர் விலகவில்லை என்றால் நான் விலகி கொள்கிறேன்,நடிக்க வராதவங்களை ஏன் நடிக்க வைக்கிறீங்க⁉” என இயக்குனரிடம் சண்டை போட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த பிரச்சினை நதியா முன்னிலையிலேயே நடந்ததால்,திடீர் என நதியா இந்த படத்தில் இருந்து தான் விலகுவதாக கூறி மிகவும் கோபமாகசென்று விட்டாராம்.அதன் பின் நதியாவிற்கு படத்தில் அந்த கதாப்பாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிக்க ஒப்பந்தமாகி இரண்டே டேக்கில் அந்த காட்சியை படமாக்கியுள்ளனர்.

மேலும் படிக்க