• Download mobile app
13 Aug 2026, ThursdayEdition - 3837
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திருவாரூர்,திருப்பரங்குன்றத்தில் எப்போது இடைத்தேர்தல் ? உயர்நீதிமன்றக்கிளை கேள்வி

November 14, 2018 தண்டோரா குழு

திருவாரூர்,திருப்பரங்குன்றத்திற்கு எப்போது இடைத்தேர்தல் நடத்தப்படும்? என உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பியுள்ளது.தமிழகத்தில் காலியாக உள்ள திருவாரூர்,திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரி மதுரையை சேர்ந்த ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த மனு மீதான விசாரணை இன்று நடைப்பெற்றது.

அப்போது,நீதிபதிகள் இடைத்தேர்தல் நடத்தாத தேர்தல் ஆணையம் மீது அதிருப்தி தெரிவித்தனர்.மேலும்,திருவாரூர்,திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலை நடத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை என்ன? என கேள்வி எழுப்பினர்.

அதைப்போல்,தேர்தலுக்கான கால அட்டவணை இருக்கிறதா? என்று கேட்ட நீதிபதிகள்,தேர்தல் நடவடிக்கை குறித்த அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக தேர்தல் அதிகாரிக்கு உத்தரவு பிறப்பித்து வழக்கை ஒத்திவைத்தனர்.

மேலும் படிக்க