• Download mobile app
23 Aug 2026, SundayEdition - 3847
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிரம்மாண்ட கூட்டணியில் இணையும் சிவகார்த்திகேயன்

November 2, 2018 தண்டோரா குழு

சீமராஜா படத்தை தொடர்ந்து,சிவகார்த்திகேயன் தற்போது ரவிக்குமார் மற்றும் ராஜேஷ்.எம் இயக்கத்தில் நடித்து வருகிறார்.இந்த இரு படங்களை முடித்த பிறகு சிவகார்த்திகேயன் அடுத்ததாக ‘இரும்புத்திரை’ பட இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் இரும்புத்திரை படத்தில் வில்லனாக நடித்த ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்.படத்தின் கதாநாயகி மற்றும் சக நட்சத்திரங்கள் முடிவாகவில்லை.ஜார்ஜ் ஒளிப்பதிவு செய்ய,யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

சிவகார்த்திகேயன் நடித்த ‘ரெமோ’,’ ‘வேலைக்காரன்’,‘சீமராஜா’ ஆகிய படங்களை தயாரித்த ஆர்.டி.ராஜா இப்படத்தையும் தயாரிக்கிறார்.மேலும் படப்பிடிப்பு வருகிற பிப்ரவரி மாதம் தொடங்கவுள்ளது.

மேலும் படிக்க