• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டி20 தொடர்களில் இருந்து தோனி நீக்கம் !

October 27, 2018 தண்டோரா குழு

ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய அணிகளுக்கு எதிரான டி-20 கிரிக்கெட் போட்டியில் இருந்து இந்திய அணி வீரர் தோனி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் மேற்கிந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடருக்கு பிறகு மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாட உள்ளது.இதில் பங்கேற்கும் இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.அதில், கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு,ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.ஆனால்,அணியில் தோனிக்கு இடம் அளிக்கப்படவில்லை.ரிஷப் பந்த்,குர்ணல் பாண்டியா,வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும்,இந்த தொடருக்கு பின் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் செய்யும் இந்திய அணி முதலில் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாட உள்ளது.இதில், விராட் கோலி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.எனினும்,இந்த போட்டிகளில் முன்னாள் கேப்டன் தோனி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க