• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

லீனா மணிமேகலையிடம் இருந்து ரூ. 1 இழப்பீடு கோரி சுசி.கணேசன் வழக்கு

October 22, 2018 தண்டோரா குழு

பாலியல் புகார் தெரிவித்த லீனா மணிமேகலையிடம் இருந்து ரூ.1 இழப்பீடு கோரி சுசி.கணேசன் வழக்கு தொடர்ந்துள்ளார்.மீடு என்ற ஹேஷ்டேக் மூலம் சமூக வலைத்தளங்களில் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் பாலியல் தொல்லைகளை வெளிப்படையாக புகார் கூறி வருகின்றனர்.அந்த வகையில் திருட்டு பயலே,கந்தசாமி உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் சுசிகணேசன் மீது பெண் எழுத்தாளர்லீனா மணிமேகலை பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.

2005-ஆம் ஆண்டு சுசி கணேசனை தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிக்காக தான் பேட்டி எடுத்ததாகவும்,பேட்டிக்கு பின்னர் தாம் வீட்டிற்கு புறப்பட்டதாகவும்,அப்போது காரில் வந்த சுசி கணேசன்,வடபழனியில் வீட்டருகே இறக்கி விடுவதாகக் கூறி தம்மை காரில் ஏற்றிக் கொண்டதாகவும்,சிறிது நேரம் பேசிய பிறகு,திடீரென காரின் கதவுகளை அடைத்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார் என தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருந்தார்.

இந்த பதிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள இயக்குநர் சுசிகணேசன்,லீனா மணிமேகலை மீது சென்னை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் லீனா மணிமேகலை மீது இயக்குநர் சுசிகணேஷன் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில்,மீடு-வில் தன் மீது பொய்யான குற்றச்சாட்டை சுமத்தியதாக கவிஞர் லீனா மணிமேகலை மீது ரூ.1 நஷ்டஈடு கேட்டு,சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் இயக்குநர் சுசி கணேசன் மனு தாக்கல் செய்துள்ளார்.இம்மனு விரைவில் விசாரணைக்கு வரும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க