• Download mobile app
04 Nov 2025, TuesdayEdition - 3555
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தேர்தலுக்கு முன் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க திமுக தயாரா ? – தம்பிதுரை எம்.பி

October 22, 2018 தண்டோரா குழு

திமுக – காங்கிரஸ் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் எனவும்,தேர்தலுக்கு முன் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க திமுக தயாரா எனவும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கேள்வி எழுப்பியுள்ளார்

இதுகுறித்து கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“MeToo என்பது பெண்களுக்கு கிடைத்த ஒரு வாய்ப்பு எனவும்,அதில் உண்மை இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.இவ்விவகாரத்தில் ஆதரவும் இல்லை,எதிர்ப்பும் இல்லை.பிரதமர் மோடியை சர்க்கஸ் ரிங் மாஸ்டர் எனவும்,அதிமுகவினரை சர்க்கஸ் கூடாரம் எனவும் திமுக தலைவர் ஸ்டாலின் கூறியதை குறிப்பிட்ட அவர்,சர்க்கசில் புலி, சிங்கம் தான் இருக்குமென தெரிவித்தார்.

மேலும் அதிமுகவினரை சிங்கம்,புலி என ஸ்டாலின் ஏற்று கொண்டது மகிழ்ச்சியளிப்பதாக கூறிய அவர்,அதற்காக ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார்.திமுக – காங்கிரஸ் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் எனவும்,தேர்தலுக்கு முன் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க திமுக தயாரா என கேள்வி எழுப்பினார்

மேலும்,தேர்தலுக்கு பின்னர் பிரதமரை தேர்ந்தெடுப்போம் என திமுக கூறினால்,அது கபட நாடகம் எனவும்,மறைமுகமாக திமுக பாஜக உடன்பாடு வைத்துள்ளதால் தான் ராகுல்காந்தியை பிரதமராக அறிவிக்க திமுக தயாராக இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.அதிமுக தனித்து போட்டியிட்டு 40 தொகுதியிலும் வெற்றி பெறுமெனவும்,தேர்தல் வெற்றிக்கு பின் பிரதமரை முடிவு செய்வோம் எனவும் கூறிய அவர்,எந்த கூட்டணியிலும் அதிமுக இல்லை என்றார்.

18 எம்.எல்.ஏ. தகுதி நீக்க வழக்கில் என்ன தீர்ப்பு வந்தாலும் அதிமுகவிற்கு கவலையில்லை எனவும்,முதல்வர் மீதான சிபிஐ விசாரணை குறித்து கருத்து சொல்ல முடியாது.மேலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது எந்த கலங்கமும் இல்லாமல் சிறப்பாக செயல்படுகிறார் எனவும்,திமுக ஆட்சியில் அதிக ஊழல் நடந்தது என முதல்வரே கூறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராசன் எலெக்சன் கமிசன் ஆதாரிட்டியா என தெரியாது எனவும்,நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டமன்ற தேர்தல் வர வாய்ப்பில்லை எனவும் கூறிய அவர்,5 ஆண்டுகள் முழுமையாக அதிமுக ஆட்சி செயல்படும் எனவும், அதிமுகவை யாராலும் வீழ்த்த முடியாது”.இவ்வாறு பேசினார்.

மேலும் படிக்க