October 20, 2018 
தண்டோரா குழு
                                காலா படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினி கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பேட்ட படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வடமாநிலங்களில் 4 மாதங்களாக விறுவிறுப்பாக நடைப்பெற்றது.இந்நிலையில் படப்பிடிப்பை முடித்து விட்டு வாரணாசியில் இருந்து சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் இருந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்
அப்போது பேசிய அவர்,
“பேட்ட படப்பிடிப்பு முழுமையாக முடிந்து விட்டது.படக்குழுவினரின் கடின உழைப்பு காரணமாகவே திட்டமிட்ட தேதிக்கு முன்பாகவே படப்பிடிப்பு முடிந்துவிட்டது.கட்சித் தொடங்குவதற்கான 90% பணிகள் முடிந்துவிட்டன. இருந்தாலும்,அதற்கான காலம்,நேரம் வர வேண்டும்.எல்லோரும் கூறுவது போல் டிசம்பர் 12 ஆம் தேதி கட்சி அறிவிப்பு கிடையாது.
மேலும்,சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை வரவேற்கிறேன்.அதேசமயம்,காலம்காலமாக கோவில்களில் இருக்கும் ஐதீகத்தையும் பின்பற்ற வேண்டும்.#MeToo என்பது பெண்களுக்கு சாதகமான ஒரு இயக்கம்.அதைப் பெண்கள் தவறாக பயன்படுத்தக்கூடாது.வைரமுத்து மீது சின்மயி புகார் கூறியிருந்தாலும்,அதை வைரமுத்து மறுத்துள்ளார்.மேலும்,அவரிடம் அதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும் கூறியுள்ளார்”.இவ்வாறு பேசினார்.