• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் தசரா பண்டிகையை முன்னிட்டு பாரம்பரிய கலை மற்றும் நடன ஊர்வலம்

October 20, 2018

கோவையை அடுத்த ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள ஶ்ரீ அன்னபூர்னேஷ்வரி யோக நரசிம்மர் கோயிலில் இன்று தசரா பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.இங்கு நவராத்திரி பண்டிகையின் துவக்கம் முதல், தொடர்ந்து ஒன்பது நாட்களுக்கு தினமும் வழிபாடுகள் நடத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

இந்நிலையில் நவராத்திரி விழாவின் இறுதி நாளை முன்னிட்டு ஆர்.எஸ்.புரம் பகுதியில் தசரா திரு வீதி உலா நடைபெற்றது.இந்த ஊர்வலத்தில் தமிழ்நாடு,கேரளா,கர்நாடகா,ஆந்திரா உள்ளிட்ட ஆறு மாநிலங்களின் பாரம்பரிய கலைகள் மற்றும் நடனங்கள் இடம்பெற்று இருந்தன.குறிப்பாக பல்வேறு கடவுள்களின் வேடமணிந்து இந்த ஊர்வலத்தில் பக்தர்கள் கலந்து கொண்டனர்.இந்த ஊர்வலத்தில்நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் படிக்க