• Download mobile app
04 Nov 2025, TuesdayEdition - 3555
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சபரிமலை கோவில் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை அணுக முடிவு: தேவசம் போர்டு தலைவர்

October 19, 2018 தண்டோரா குழு

சபரிமலைக்கு அனைத்து வயது பெண்பகளும் வரலாம் என்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என திருவிதாங்கூர் தேவசம் போர்டு கூறியுள்ளது.

சபரிமலை தீர்ப்பை எதிர்த்து மறுஆய்வு மனு செய்வது தொடர்பாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு ஆலோசனைக் கூட்டம் தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார் தலைமையில் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது.

பின்னர் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பத்மகுார்,

“கடந்த 2 நாட்களாக சபரிமலையில் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்தும் உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது.சபரிமலையில் நடைபெற்று வரும் நிகழ்வுகளால் மற்ற மாநில பக்தர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சபரிமலை புனித பூமியாகும்.அதனை கவலர பூமியாக்க பெண்கள் நினைக்க கூடாது.அப்படி கலவர பூமியாக்கவும் நாங்கள் விட மாட்டோம்.இன்று நடைபெற்ற கூட்டத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.சபரிமலை நிகழ்வுகள் குறித்து கேரள உயர்நீதிமன்றத்திலும் அறிக்கையை ஒப்படைப்போம்.

தேவசம் போர்டின் முடிவுகளுக்கு கேரள அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்ட பிறகு நடைபெறும் விசாரணையின் போது தேவசம் போர்டு இந்த விவகாரத்தில் தனது கருத்தை தெரிவிக்கும் என்றார்.மேலும்,உச்ச நீதிமன்றத்தில் நாட முடிவெடுத்திருப்பதால் பக்தர்கள் அமைதி காக்க வேண்டும்” எனக் கூறினார்.

மேலும் படிக்க