• Download mobile app
21 Dec 2025, SundayEdition - 3602
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பெண்களை சன்னிதானத்துக்குள் வரவே கூடாது என்று தடுப்பது தவறு – நடிகர் சிவகுமார்

October 19, 2018 தண்டோரா குழு

பெண்களை சன்னிதானத்துக்குள் வரவே கூடாது என்று தடுப்பது தவறு என நடிகர் சிவகுமார் கருத்து தெரிவித்துள்ளார்

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என சமீபத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.இந்தத் தீர்ப்புக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பி வருக்கிறது.கேரளாவில் உள்ள பெண்கள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதற்கிடையில்,இன்று பலத்த எதிர்ப்புக்கு இடையே சபரிமலைக்கு செல்ல முயன்ற பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.இந்நிலையில்,இந்த விவகாரம் குறித்து நடிகர் சிவகுமார் கருத்து தெரிவித்துள்ளார் .

இது குறித்து அவர் கூறுகையில்,

“100 வருடங்களுக்கு முன்பு வரை சபரிமலை தற்போது இருப்பதைவிட மேலும் அடர்ந்த வனப்பகுதியாக இருந்தது. சன்னிதானத்துக்குச் செல்ல சரியான பாதை வசதி இல்லை.விலங்குகள் தாக்கும் அபாயம் அதிகம் இருந்தது. எனவே,ஆண்கள் மட்டும் கூட்டமாகக் கோஷம் போட்டுக்கொண்டே சென்று வழிபட்டனர்.பெண்களுடைய உதிரப்போக்கு,மோப்ப சக்தி கொண்ட விலங்குகளை ஈர்க்கும் சக்தி கொண்டதால்,அவர்களை ஆண்கள் உடன் அழைத்துச் செல்வதில்லை.

ஆனால் தற்போது காலம் நவீன மயமாகி விட்டது.பழைய காலத்து அச்சங்கள் இப்போது இல்லை.நீதிமன்றமும் அனுமதி வழங்கி விட்டது.இனியும் பெண்களை சன்னிதானத்துக்குள் வரவே கூடாது என்று தடுப்பது தவறு.விரத காலங்களைத் தவிர்த்து மற்ற நாட்களில் பெண்களும் வந்து வழிபாடு செய்யுமாறு ஏற்பாடும் உடன்பாடும் உருவாக வேண்டும்” என கூறியுள்ளார்.

மேலும் படிக்க