• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை பூ மார்க்கெட்டில் ஆயுத பூஜை பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்

October 17, 2018 தண்டோரா குழு

ஆயுத பூஜையை முன்னிட்டு கடை,வீடுகள் மற்றும் நிறுவனங்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படும்.இதனை முன்னிட்டு கோவை பூ மார்க்கெட்டில் பூக்கள் வரத்து அதிகரித்துள்ளது.வாழைக்கன்று,பொரிகடலை ஆகியவையும் விற்பனை செய்யப்படுகிறது.இதனை வாங்க பொதுமக்களின் கூட்டம் இன்று அதிகமாகவே இருக்கிறது.

கடந்த சில நாட்களை விட பூக்களின் விலையும் சற்றே அதிகமாக இருக்கிறது.சில நாட்களுக்கு முன்னர் கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட செவ்வந்தி பூ தற்போது 200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.அதேபோல 200 ரூபாயக்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகை பூ தற்போது 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.ஒரு ஜோடி வாழக்கன்று தற்போது 50 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

பூ விற்பனை குறித்து பேசிய வியாபாரிகள்,

கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு மலர்களின் விலை குறைவாகவே உள்ளதாகவும்,ஆனால் பெட்ரோல் டீசல் விலை உயர்வால் பூக்களை எடுத்து செல்ல ஆட்கள் குறைவால் விற்பனை தற்போது குறைந்து உள்ளதாக தெரிவித்தனர்.இந்த பொருட்களை வாங்க அதிகளவிலான மக்கள் குவிந்துள்ளனர்.மேலும் பொதுமக்களின் வரவால் பூ மார்க்கெட் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது.

மேலும் படிக்க