• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அஜித்தின் 59 வது படத்தில் நடிக்கும் நஸ்ரியா?

October 17, 2018 தண்டோரா குழு

வீரம்,வேதாளம்,விவேகம் படங்களை தொடர்ந்து சிறுத்தை சிவா- அஜித் கூட்டணி நான்காவது முறையாக இணைத்துள்ள படம் விஸ்வாசம்.

‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். அடுத்த ஆண்டு(2019) பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ள இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

விஸ்வாசம் படத்தை தொடர்ந்து அஜித்தின் 59-வது படத்தை ‘சதுரங்க வேட்டை,தீரன் அதிகாரம் ஒன்று’ பட இயக்குநர் வினோத் இயக்கவுள்ளாராம்.இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கவுள்ளார்.

இப்படத்தின் ஷூட்டிங்கை அடுத்த ஆண்டு (2019) ஜனவரி மாதம் துவங்கவுள்ளனர்.இப்படம் ஹிந்தியில் வெளியான ‘பிங்க்’ (Pink) படத்தின் ரீமேக் என கூறப்படுகிறது இதன் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறதாம்.

பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான இப்படத்தில் அமிதாப் பச்சன்,டாப்சி நடித்திருந்தனர்.இந்நிலையில்,ஹிந்தியில் டாப்சி நடித்த வேடத்தில் தமிழில் நடிக்க நடிகை நஸ்ரியா ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.எனினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க