October 16, 2018
தண்டோரா குழு
கோவை செல்வபுரம் அருகே அரசு பேருந்து மோதியதில்,பள்ளி சிறுவன் சம்பவ இடத்திலேயே பலியானது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செண்டரிங் வேலை செய்து வரும் உதயராஜின் மகன் சுபாஷ்(8).இவர் செல்வபுரம் சிவாலயா திரையரங்கம் அருகே உள்ள அரசு பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.இந்நிலையில் நேற்று சிறுவன் வழக்கம் போல பள்ளி முடித்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது அதிவேகமாக வந்த அரசு பேருந்து எல்.ஐ.சி காலனி அருகே சிறுவன் மீது மோதியது.இதில் பலத்த காயம் அடைந்த சிறுவனை அருகே இருந்தவர்கள் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.ஆனால் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து செல்வபுரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.மேலும் சிறுவனின் பிரேதத்தை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைத்துள்ளனர்.பள்ளிச்சிறுவன் மீது அரசுப் பேருந்து மோதி பலியான சம்பவம் செல்வபுரம் பகுதியில் உள்ள பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.