• Download mobile app
27 Jun 2026, SaturdayEdition - 3790
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

96,ராட்சசன் படத்தை பாராட்டிய இயக்குநர் ஷங்கர்!

October 15, 2018 தண்டோரா குழு

பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி – திரிஷா நடிப்பில் கடந்த 4-ந் தேதி வெளியாகிய 96. பள்ளிக் காதலை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.குறிப்பாக இப்படத்தை இளைஞர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர்.அதைபோல் பல்வேறு திரையுல பிரபலங்களும் படத்தையும்,படக்குழுவையும் பாராட்டி வருகின்றனர்.

அதேபோல்,முண்டாசுப்பட்டி படத்தை இயக்கிய ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் – அமலாபால் நடிப்பில் 5-ந் தேதி வெளியான சைக்கோ த்ரில்லர் படமாக ராட்சசன் படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.இப்படத்தை சமூக வலைத்தளங்களில் புகழ்ந்து ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.இரு படங்களின் காட்சிகளின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது.இந்நிலையில்,படத்தை பார்த்த பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் 96,ராட்சசன் படக்குழுவை பாராட்டி உள்ளார்.

இதுகுறித்து ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில்,

“96,ஏதாவது ஒரு காட்சியில் தனிப்பட்ட முறையில் நம்மை தொடர்புபடுத்துகிறது.அதுவே இந்த படத்தின் அழகு.விஜய்சேதுபதி அற்புதமான நடிப்பு.திரிஷாவை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது.பிரேம்குமாருக்கு வாழ்த்துக்கள்.ராட்சசன்,மற்றொரு சுவாரஸ்யமான படம்.ரசிகர்கள் இயக்குநர் ராம்குமாருக்கு கைதட்டி வாழ்த்து தெரிவிப்பதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது.அது அவருக்கே உரியதாகும்” எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க