• Download mobile app
02 Sep 2026, WednesdayEdition - 3857
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஐஎஸ்ஐஎஸ் முக்கிய செய்தி தொடர்பாளர் கொல்லப்பட்டார்

September 1, 2016 தண்டோரா குழு

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் செய்தித்தொடர்பாளரும், அதன் சதி திட்டங்கள் பலவற்றுக்கு மூளையாகச் செயல்பட்டவருமான அபு முகமத் அல் அதானி சிரியாவில் கொல்லப்பட்டார். இந்தத் தகவலை ஐஎஸ் அமைப்பே வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவாகச் செயல்பட்டு வரும் ஆமஃக் செய்தி நிறுவனம் நேற்று வெளியிட்ட தகவலில்,அலெப்போவில் ராணுவ படைகள் நடத்திய தாக்குதலில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் அல் அதானி கொல்லப்பட்டார்.அவரின் மரணத்திற்குப் பதில் தாக்குதலை நாங்கள் நடத்தியே தீருவோம் என்று சபதம் ஏற்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.

அல் அதானி கொல்லப்பட்ட விதம் குறித்து எந்தத் தகவலையும் ஐஎஸ் அமைப்பு வெளியிடவில்லை.அல் அதானியின் மரணம் ஐஎஸ் அமைப்புக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

அல் அதானியின் இயற்பெயர் தஹா சோபி ஃபலஹா.சிரியாவில் பிறந்த அல் அதானி தன்னுடைய 30வது வயதில் அல் கொய்தா தீவிரவாத அமைப்பில் இணைந்தார்.அதன் பின் ஐஎஸ் அமைப்பில் இணைந்து ஐஎஸ் அமைப்பின் முக்கிய தாக்குதல் பலவற்றுக்கு மூளையாக இருந்து செயல்பட்டிருக்கிறார்.

மேலும்,கடந்த நவம்பர் மாதம் பிரான்ஸ் தலைநகரில் ஐஎஸ் அமைப்பு நிகழ்த்திய தீவிரவாத தாக்குதலில் சுமார் 130 பேர் கொல்லப்பட்டனர் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர்.இந்தத் தாக்குதல் பின்னணியில் இருந்து திட்டங்களை வகுத்தவரும் அல் அதானியே.

மேலும்,இணை தளங்களில் ஐஎஸ் அமைப்பின் ஒலி அமைப்பும் ஐஎஸ் சம்பந்தப்பட்ட முக்கிய தகவல்களையும் வெளியிட்டு ஐஎஸ் அமைப்பின் மிகப் பெரிய சக்தியாகச் செயல்பட்டு வந்தவர் இவர்.

அமெரிக்க அதிபர் ஒபாமாவை முட்டாள் என்று விமர்சித்ததுடன் அமெரிக்காவின் மாகாணங்களின் செயலாளர் ஜான் கெரியை வயதான சீசர் எனவும் விமர்சித்தார். அதுமட்டுமல்ல சிரியாவின் அரசுப் படைகளுக்கு தொடர்ந்து ஆதவரவாக இருந்து வரும் சவுதி அரேபியாவைப் பலமுறை இழிவுப்படுத்தி விமர்சித்து வந்தார் அல் ஆதானி.

அல் அதானியின் மரணம் குறித்து அமெரிக்காவின் செய்தி தொடர்பு செயலாளர் பீட்டர் குக் கூறும்போது,அல் அதானியை மையமாகக் கொண்டு அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலில் அல் அதானி கொல்லப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அல் அதானியின் மரணம் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது என்று கூறினார்.

மேலும்,ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கோட்டை என்று கருதப்படும் அலெப்போவில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு சமீப காலமாக வீழ்ச்சியை சந்திந்து வருகிறது.அமெரிக்க ஆதரவு பெற்ற சிரிய ஜனநாயகப் படைகள் அலெப்போவில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிடமிருந்து பெரும்பாலான பகுதியைக் கைப்பற்றியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க