• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அஜித் குறித்து இன்ஸ்டாகிராமில் விஜய் மகன் சஞ்சய் பதிவு செய்தாரா ?

October 12, 2018 தண்டோரா குழு

பொதுவாக சமூக வலைதளங்களில் அஜித் – விஜய் சம்பந்தப்பட்ட செய்திகள் என்றாலே அது பெரும் வைரலாகி விடுகிறது.அந்தவகையில் சமீபத்தில் விஜய் மகன் சஞ்சய் குறும்படத்தில் நடித்திருக்கிறார் என்பதும் வைரலாகப் பரவியது.

இதற்கிடையில்,விஜய்யின் மகன் சஞ்சய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,”விஜய்க்கு பிறகு யாரைப் பிடிக்கும் என்பதற்கு “அஜித் மற்றும் விஜய்சேதுபதி” என்றும், “யாருடன் நடிக்க விருப்பம்” என்பதற்கு அப்பா,அஜித் மற்றும் விஜய் சேதுபதி என்று சில கேள்விகளுக்கு பதிலளித்ததாக சில ஸ்க்ரீன் சாட்டுகள் வைரலானது.

அதைபோல்,”தல பண்ற ஸ்பெஷல் பிரியாணி சாப்பிட்டுள்ளீர்களா” என்பதற்கு ஒரே ஒரு முறை.. அது வேற லெவல் என்றும்,”தலயைப் பற்றி” எனக் கேட்டதற்கு “கெத்தானவர்” என்றும் இன்ஸ்டாகிராமில் சஞ்சய் பதிலளித்திருக்கிறார் என்பது போன்ற செய்திகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.எனினும்,இந்தப் பதில்களைக் கூறியது விஜய்யின் மகன் தானா என்ற கேள்வியும் எழுந்தது.

இந்நிலையில், விஜய் தரப்பிலிருந்து இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.அதில்,விஜய் மகன் சஞ்சய் பதிலளித்ததாக சில செய்திகள் சமூக வலைதளங்களில் பரவலாக புகைப்படங்களாக பரவி வருகிறது.இதனை யாரும் நம்ப வேண்டாம்.தளபதி விஜய்யின் மகன் சஞ்சய்,மகள் திவ்யா சாஷா இருவருமே எந்த சமூக வலைதளங்களிலும் இல்லை.தயவுசெய்து தளபதி விஜய் ரசிகர்கள் யாரும் இந்தப் போலிக் கணக்குகளுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டாம் எனவும் அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க