• Download mobile app
15 Mar 2026, SundayEdition - 3686
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிகர் விஜயை தளபதி என்று ஏற்குமா திமுக… உதயநிதி பதில்..!

October 3, 2018 தண்டோரா குழு

நடிகர் விஜயை தளபதி என்று அழைப்பது தொடர்பாக ரசிகரின் ட்விட்க்கு உதயநிதி பதில் ட்விட் செய்துள்ளார்.

தமிழக அரசியலில் முக்கிய கட்சியான திமுகவின் தலைவர் ஸ்டாலினை அணைவருமே தளபதி என்று தான் அன்போன அடைமொழியில் அழைப்பார்கள். இதுமட்டுமின்றி கட்சி அறிவிப்புகள், பேனர்கள், போஸ்டர்கள், கொண்டாட்டங்கள் என அனைத்து நிகவுகளிலும் ஸ்டாலின்னை ‘தளபதி’ என்றே குறிப்பிட்டு இருப்பார்கள். இதற்கிடையில் நடிகர் விஜயை அவரது ரசிகர்கள் இளைய தளபதி என்று அழைத்து வந்த நிலையில் மெர்சல் படத்தில் இருந்து தளபதி என்று அழைக்க தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், நேற்று சென்னையில் சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிப்பில், ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில், ஏ.ஆர் ரகுமான் இசையில் வெளியாகவுள்ள ‘சர்க்கார்’ படத்தின் இசை வெளியிட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் விஜய் நான் படத்தில் முதல்வர் இல்லை நிஜத்தில் முதல்வரானால் நடிக்க மாட்டேன். போன்ற பேச்சுக்கள் சமுக வலைதளங்களில் டிரண்டு ஆகிவருகிறது. இந்நிலையில், ட்விட்டர் பக்கத்தில் “விஜய்யை தளபதி என்று அழைப்பதை, திமுகவினர் எப்படி எடுத்துக்கொள்வர். பார்த்து செய்யுங்க சார்” என்று உதயநிதி ஸ்டாலினைக் குறிப்பிட்டு ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின் “ஆம்! திரையுலக தளபதி விஜய் அண்ணா! திரையுலக தல அஜித் சார்! சரி தான் !” என்று பதிலளித்துள்ளார். உதயநிதி ஸ்டாலினின் இந்த பதில் தற்போது வைரலாக ரீ-ட்வீட் செய்யப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க