October 1, 2018
தண்டோரா குழு
திரையுலகளில் யோசிக்க முடியாத சாதனைகளை படைத்த நடிகர் சிவாஜி கணேசனின் 91வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்தநாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.அதன்படி சிவாஜி கணேசனின் 91-வது பிறந்தநாள் இன்று அரசு விழாவாக கொண்டாடப்பட்டது.
இந்நிலையில் நடிகரும்,மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவருமான கமல் ஹாசன்,நடிகர் சிவாஜி கணேசன் பிறந்தநாள் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.அதில்,
“இன்று,அய்யா நடிகர் திலகத்தின் பிறந்த நாள்.அவரின் எத்தனையோ தத்து பிள்ளைகளில் ஒருவனாய்… என் நடிப்பின் தந்தைக்கு வணக்கம்.”என்று பதிவிட்டுள்ளார்.