September 27, 2018
தண்டோரா குழு
உலகிலேயே மிக அதிக விலையிலான தங்கம் மற்றும் வைரக்கற்களால் தயாரான ஷு துபாயில் தயாரிக்கப்பட்டுள்ளது.”என்ன தான் தங்கத்தில் செருப்பு செஞ்சாலும் அத கால்ல தான் போட முடியும் தலைல தூக்கி வைக்க முடியாதுனு “ நாம பழமொழி கேட்டிருப்போம்.ஆனால் அந்த பழமொழியை நிஜமாக்கும் வகையில் ஐக்கிய அரபு நாடான துபாயில் தங்க ஷூ தயாரிக்கப்பட்டுள்ளது.இந்த ஷுவை ஜெட்டா துபாய் நிறுவனமும்,பாசியன் ஜுவல்லரியும் இணைந்து தயாரித்துள்ளன.
இது தான் உலகின் மிக விலை உயர்ந்த,ஆடம்பர ஷூ எனக் கூறப்படுகிறது.ஏனெனில் 100-க்கும் அதிகமான 15 காரட் வைரக்கற்களையும்,தங்க கட்டிகளையும் பயன்படுத்தி தயார் செய்யப்பட்ட இந்த ‘ஷு’ க்களின் மதிப்பு ரூ.123 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.இதனை முழுமையாக வடிவமைத்து தயாரிக்க 9 மாத காலம் ஆனதாக தயாரிப்பு நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும்,தற்பொழுது காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் இந்த காலணியின் அளவு ஐரோப்பிய அளவில் 36 எனவும்,காலணியை வாங்குபவர்களுக்கு தக்கவாறு அளவு மாற்றப்படும் எனவும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.