September 26, 2018
தண்டோரா குழு
குறைந்த பட்ச ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாநகராட்சியில் பணிபுரியும் 5௦௦க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் பேரணியாக சென்றனர்.
கோவை மாநகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு அரசானை 62ன் படி குறைந்த பட்ச ஊதியம் வழங்க வேண்டும், மேலும் சம்பளத்துடன் கூடிய வார விடுமுறை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி துப்புரவு பணியாளர்கள் கோவை மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி முதல் வ.உ.சி பூங்கா வரை பேரணியாக சென்றனர்.
இந்த பேரணியில் பெண்கள் உட்பட 500 க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.480 நாட்கள் பணிபுரிந்த அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என மாநகராட்சிக்கு கோரிக்கை வைத்தனர்.மேலும்,கோவை மாநகராட்சியில் தினக்கூலி பணியாளர் அனைவருக்கும் சட்டப்படியான போனஸ் வழங்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.இந்த பேரணியில் பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.