• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை அருகே தடை செய்யப்பட்ட 2,350 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்

September 26, 2018 தண்டோரா குழு

கோவை மாவட்டம் அன்னூரில் தனியார் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2.35 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த மசக்கவுண்டன்செட்டிபாளையம் பகுதியில் தடை செய்யப்பட்ட,குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக அன்னூர் காவல்நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து காவல் ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையில்,பத்துக்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.அப்போது சாந்தகுமார் என்பவருக்கு சொந்தமான குடோனில் சோதனை மேற்கொண்டதில் தடை செய்யப்பட்ட பான்மசாலா,குட்கா,ஆகியவை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவைகளை பறிமுதல் செய்த போலீசார்,அன்னூர் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

மேலும்,பறிமுதல் செய்யப்பட்ட குட்காவின் மதிப்பு 13 லட்சத்து 72 ஆயிரம் என்பதும்,2.350 கிலோ மூலப்பொருட்கள் இருந்தது தெரியவந்தது.இதனையடுத்து குடோன் உரிமையாளர் சாந்தகுமாரை கைது செய்த போலீஸார் காவல்நிலையம் அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்த கோவை கணபதி பகுதியைச் சார்ந்த பட்டுராஜ்,தங்க சிங்,ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கருமத்தம்பட்டியில் நேற்று 450 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்த நிலையில் அன்னூரில் போலீஸார் 2350 கிலோ பறிமுதல் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க