September 25, 2018
தண்டோரா குழு
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கேல் ரத்னா விருது வழங்கினார்.
இந்திய அரசால் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதாக கருதப்படுவது ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது.கடந்த 1991ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் இவ்விருதை இதுவரை 34 பேர் மட்டுமே பெற்றுள்ளனர்.இதற்கிடையில் 2018 க்கான தேசிய விளையாட்டு விருதுகளை மத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்தது.இதில்,இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி மற்றும் பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானுவிற்கு கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில்,டெல்லியில் குடியரசுத்தலைவர் மாளிகையில் நடந்த விழாவில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் விராட் கோலி மற்றும் பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானுவிற்கு கேல் ரத்னா விருதை வழங்கினார்.அதைபோல் குத்துச்சண்டை பயிற்சியாளர் சுபேதார்செனந்தா குட்டப்பா,டேபிள் டென்னிஸ் பயிற்சியாளர் சீனிவாச ராவ் தடகள வீரர் வி.ஆர்.பீடு ஆகியோருக்கு துரோணாச்சாரியார் விருதும்,ஈட்டி எறியும் வீரர் நீரஜ் சோப்ரா,ஓட்டப்பந்தய வீரர் ஜின்சன் ஜான்சன்,வீராங்கனை நெலா குர்த்தி,குத்துசண்டை வீரர் சதிஷ்குமார் ஆகியோருக்கு அர்ஜுனா விருதை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.