• Download mobile app
15 Mar 2026, SundayEdition - 3686
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிம்ட்டாங்காரன் வார்த்தைக்கான அர்த்தம் என்ன? – பாடலாசிரியர் விவேக்

September 24, 2018 தண்டோரா குழு

மெர்சல் படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடித்து வருகிறார்.துப்பாக்கி,கத்தி படங்களின் வெற்றியை தொடர்ந்து இந்த கூட்டணி மூன்றாவது முறையாக இணைத்துள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.மேலும்,வரலட்சுமி சரத்குமார், ராதாரவி,யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.இப்படத்தின் இசை வெளியிட்டு விழா அக்டோபர் 2ம் தேதி நடைபெறவுள்ளது.இதற்கிடையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள சிம்ட்டாங்காரன் பாடல் இன்று வெளியானது.

மெர்சல் படத்திற்குப் பிறகு ஏ.ஆர்.ரஹ்மான் – விவேக் கூட்டணி இந்தப் படத்தில் இணைந்துள்ளது.இப்படத்தின் அத்தனை பாடல்களையும் எழுதியுள்ள விவேக் சிம்ட்டாங்காரன் என்கிற வார்த்தைக்கான அர்த்தத்தை தனது முகநூலில் பகிர்ந்துள்ளார்.சிம்டாங்காரன் என்கிற சென்னைத் தமிழ் வார்த்தைக்கு,கவர்ந்து இழுப்பவன் / பயமற்றவன்/துடுக்கானவன் (Attractive Young Man – Charismatic / Fearless / Audacious) ‬என்று அர்த்தமாம்.”கண்சிமிட்டாமசிலரபார்க்கதோனுமே.. அந்தஒருவன் .. நம்#சிம்ட்டாங்காரன்‬” எனக்கூறியிருக்கிறார்.

மேலும் படிக்க