• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டுக்கு தப்பிய இன்னொரு குஜராத்தி! – நடிகர் சித்தார்த் டுவீட்

September 24, 2018 தண்டோரா குழு

வங்கியில் 5000 கோடி ரூபாய் கடன் வாங்கி வெளிநாட்டுக்கு தப்பியோடியதாக் கூறப்படும் தொழிலதிபர் குறித்து நடிகர் சித்தார்த் டுவிட்டரில் கருத்து தெரிவித்து உள்ளார்.

குஜராத்தைச் சேர்ந்த தொழிலதிபரான நிதின் சந்தேசரா மருந்துக் கம்பெனி நடத்தி வருகிறார்.ஆந்திரா வங்கியில் ரூ.5,000 கோடி வாங்கினார். ஆனால், அதை அவர் திருப்பிச் செலுத்தாமல் தலைமறைவாகினார். இதனால் சந்தேசரா மீது அமலாக்கப்பிரிவு வழக்கு பதிவு செய்துள்ளது.இதையடுத்து,அவரது மருந்துக் கம்பெனியின் 4,700 கோடி ரூபாய் சொத்துகளை அமலாக்கப்பிரிவு முடக்கியது.அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டு,அவரை காவல்துறை தேடிவருகிறது.இதற்கிடையில், தொழிலதிபர் நிதின் சந்தேசரா துபாயில் இருந்து நைஜீரியாவுக்கு தப்பிச் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்நிலையில்,இந்த செய்தியைப் பகிர்ந்து இது குறித்து நடிகர் சித்தார்த் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,

“இன்னொரு குஜராத்தி சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு தப்பி சென்றுள்ளார்.நீங்கள் கறுப்புப் பணத்தை இந்தியா கொண்டு வருவதாகத்தானே சொன்னீர்கள். ஆனால்,எதிர்மறையாக அல்லவா நடந்துக் கொண்டிருக்கிறது.இங்கு சாமானியன் பணம் மதிப்பு நீக்கம் செய்யப்படுகிறது” அவமானம்;என்நாடு எங்கே” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

மேலும்,பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.280 கோடி மோசடியும்,ரூ.11 ஆயிரத்து 600 கோடி சட்டவிரோத பரிவர்த்தனையும் செய்த வகையில் சிக்கிய நீரவ் மோடியும் குஜராத்காரர்.எனவே தான் இந்த ட்வீட்டில் இன்னொரு குஜராத்தி என சித்தார்த் பதிவிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க