September 24, 2018
தண்டோரா குழு
கேரளாவில் வரும் 25,26-ம் தேதிகளில் மீண்டும் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கேரளாவில் அண்மையில் பெய்த கனமழையால் அந்த மாநிலமே நிலைகுழைந்தது.கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட கேரளா தற்போது முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.இந்நிலையில் கேரளாவில்,சில மாவட்டங்களுக்கு மீண்டும் கனமழை எச்சரிக்கைக்கான “யெல்லோ அலர்ட்” விடுக்கப்பட்டுள்ளது. செப்.25 மற்றும் 26 ஆகிய நாட்களில் 64.4 மில்லி மீட்டரில் இருந்து 124.4 மில்லி மீட்டர் வரை மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மேலும்,நாளை கேரளாவின் பத்தினம்திட்டா,இடுக்கி,வயநாடு மாவட்டங்களுக்கு 2ம் நிலை எச்சரிக்கையான யெல்லோ அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.அதைபோல், நாளை மறுநாள் பாலக்காடு,இடுக்கி,திருச்சூர்,மற்றும் வயநாடு மாவட்டங்களுக்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில்,முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகங்களுக்கு மாநில பேரிடர் மேலாண்மை அமைப்பு அறிவுறுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.