September 22, 2018
தண்டோரா குழு
மதுரவாயல் அருகே கொசு மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்த சின்னத்திரை நடிகை நிலானி மீது போலீசார் தற்கொலைக்கு முயற்சி செய்த பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சின்னத்திரை தொடர்களில் நடித்து வருபவர் நடிகை நிலானி.இவர் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக,காவலர் உடையில் இருந்தவாறு கருத்து தெரிவித்தால் கைது செய்யப்பட்டு,பின்னர் ஜாமீனில் விடுதலையானார்.இதற்கிடையில் இவரைத் திருமணம் செய்ய விரும்பிய உதவி இயக்குநர் காந்தி லலித்குமார்,கடந்த சில தினங்களுக்கு முன்பு கே.கே.நகர் பகுதியில் தீக்குளித்து தற்கொலை செய்துக்கொண்டார்.இதையடுத்து,அவரது தற்கொலைக்கு நிலானி தான் காரணம் என்று செய்திகள் பரவின.
இந்நிலையில்,கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தனது வீட்டில் நடிகை நிலானி கொசு மருந்து குடித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார்.மயக்கமடைந்த நிலானியை ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.இதையடுத்து நடிகை நிலானி நலமுடன் உள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில்,கொசு மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறி,அவர் மீது மதுரவாயல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.