சென்னை நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் அதிவேகமாக வந்து அடிக்கடி விபத்தில் சிக்குவதால் வரும் வாகனங்களின் வேகத்தை அறிந்து அவர்களுக்கு அபராதம் விதிக்க அரசு முடிவெடுத்தது.
இதையடுத்து சென்னை நோக்கி வரும் நெடுஞ்சாலைகளில் பல்வேறு இடங்களில் லேசர் வேகக்கருவி பொருத்தப்பட்டது.கடந்த சில நாட்களாக ஒத்திகை பார்க்கப்பட்ட பின் இன்று முதல் அந்தக் கருவிகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.
இந்தக் கருவி மூலம் ஒரு வாகனம் 100 கிலோமீட்டர் வேகத்தைத் தாண்டுவது கண்டுபிடிக்கப்பட்டால் 400 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.மீண்டும் அதே தவறை செய்தால் இரண்டாவது முறைக்கு 1,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் இந்த அபராதங்கள் முழுவதும் வேகத்தைத் தொட்ட இடத்திற்கு அடுத்த சுங்கச்சாவடியில் வசூல் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் சென்னையை நோக்கிச் செல்லும் வாகன ஓட்டிகளும்,அங்கிருந்து வருபவர்களும் மிகவும் எச்சரிக்கையாக வாகனத்தை ஒட்டவேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
நெல் சாகுபடியில் இலையுறை கருகல் நோயைக் கட்டுப்படுத்தும் ஃபெளுஜிட் எனும் பூசனக்கொல்லி மருந்து பாயர் கிராப் சயன்ஸ் நிறுவனம் அறிமுகம்
ஈஷாவில் சத்குரு முன்னிலையில் கொண்டாடப்பட்ட குரு பௌர்ணமி விழா
எலக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனமான ரிவர் ஈரோட்டில் தனது முதல் விற்பனை நிலையத்தை தொடங்கியுள்ளது
கோவை சுந்தராபுரத்தில் சேரா ஹோம் ஜங்ஷன் பிரமாண்ட ஷோரூம் திறப்பு
உத்தரவாதமான அதிக மைலேஜ் மற்றும் அதிக லாபத்தை வழங்கும் இலகுரக வணிக வாகன பிரிவில் மஹிந்திரா ஃபியூரியோ 8 அறிமுகம்
ஸ்ரீ சச்சிதானந்த தீர்த்த மகா சுவாமிகள் கோவை வருகை சாதுர்மாஸ்ய வ்ரத மஹோத்ஸவம் – 65 நாட்கள் சிறப்பு பூஜை