September 21, 2018
தண்டோரா குழு
சினிமாவில் தான் விஜயகுமார் நல்லவர்.. நிஜத்தில் அவர் வேற மாதிரி என நடிகர் விஜய்குமாரின் மகள் வனிதா சரமாரியாக குற்றசாட்டுகளை முன் வைத்துள்ளார்.
நடிகர் விஜயகுமாரின் மனைவி மறைந்த மஞ்சுளாவின் பெயரில் சென்னை ஆலப்பாக்கத்தில் ஒரு வீடு உள்ளது.அந்த வீட்டை நடிகர் விஜயகுமார் சினிமா படப்பிடிப்புக்கு விட்டு வருகிறார்.இந்த வீட்டில் சில நாட்களுக்கு முன்பு படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்று வனிதா வாடைக்கு எடுத்ததாகவும்,ஆனால் வீட்டை காலி செய்ய மறுப்பதாகவும்,மதுரவாயல் காவல் நிலையத்தில் விஜயகுமார் புகார் அளித்தார்.
அப்புகாரின் பேரில் வனிதாவின் ஆதரவாளர்கள் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில்,வனிதா தலைமறைவாகி உள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இந்நிலையில்,இன்று சென்னை மாநகர போலீல் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“இது எனது அம்மா வீடு என்னுடைய தந்தை என்னை வீட்டை விட்டு விரட்ட முயற்சி செய்கிறார்.நீதிமன்றத்தில் வழக்கு உள்ள நிலையில்,மதுரவாயல் இன்ஸ்பெக்டரை வைத்து என் தந்தை,என்னை வீட்டை விட்டு விரட்டினார்.இன்ஸ்பெக்டர் ஜார்ஸ்மில்லர் என்னைத் தாக்கினார்.என் வீட்டுக்கு வந்த இன்ஸ்பெக்டர் என்னை என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்வதாக மிரட்டி,அடித்து உதைத்து வெளியே துரத்தினார்.போலீஸ் என்னை தேடவில்லை.என் மீதான தாக்குதலுக்கு காரணம் கேட்க நான் தான் தேடிச் சென்றேன்.சினிமாவில் தான் விஜயகுமார் நல்லவர்.. நிஜத்தில் அவர் வேற மாதிரி”.இவ்வாறு பேசினார்.