• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தகராறில் ஈடுபட்ட வாலிபரின் உதட்டை கடித்த பெண் !

September 21, 2018

தாய்லாந்தில் தன்னுடன் தகராறில் ஈடுபட்ட வாலிபரின் உதட்டை பெண் ஒருவர் கடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த சாஷாங்க் அகர்வால் என்பவர் தனது நண்பர்களுடன் தாய்லாந்திற்கு சுற்றுலா சென்றுள்ளார்.அங்கு மது அருந்தியிருந்த சாஷாங்க் தன்னுடைய நண்பர்களுடன் பட்டாயா பகுதியில் உள்ள தெரு ஒன்றில் அதிகாலை 4 மணிக்கு நடந்து சென்றுள்ளார்.

அப்போது,அங்கு சுகன்யா பபேக் (38) என்ற பெண் நின்றுக்கொண்டு இருந்தார்.அவரிடம் சாஷாங்க் பேச்சு கொடுத்துள்ளார்.சிறிது நேரம் கழித்து திடீரென அந்த பெண் சாஷாங்கை தாக்கி அவருடைய உதட்டினை கடிக்க ஆரம்பித்தார்.இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சுற்றி இருந்தவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்து இருவரையும் பிரித்து விட்டனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கீழ் உதடு பாதிக்கப்பட்டு ரத்தத்துடன் இருந்த சாஷாங்கை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் அப்பெண்ணை காவல்நிலையத்திற்கு அழைத்து நடந்த சம்பவம் குறித்து விசாரித்தனர்.அப்போது,அவன் யார் என்றே எனக்கு தெரியாது.நான் என்னுடைய வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும் போது தான் இருவரும் பேச ஆரம்பித்தோம்.அப்பொழுது திடீரென அவர் என்னுடைய கையை பிடித்து இழுக்க ஆரம்பித்ததோடு, என்னுடைய கன்னத்தில் அறைந்தார்.பிறகு என்னுடைய பாதுகாப்பிற்காகவே நானும் அவரை தாக்க ஆரம்பித்தேன்.இதில் என் மீது எந்த தவறும் இல்லை என சுகன்யா பபேக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க