• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் ஞானசேகரனுக்கு அர்ஜுனா விருது !

September 20, 2018 தண்டோரா குழு

தமிழக டேபிள் டென்னிஸ் வீரரான சத்யன் ஞானசேகரனுக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசால் ஆண்டுதோறும் விளையாட்டுத் துறையில் சிறந்த விளங்கும் வீரர்களுக்கு அர்ஜூனா விருது வழங்கி கவுரவிப்பது வழக்கம். இந்த விருதுக்கான பெயரை அந்தந்த விளையாட்டு சங்கங்கள் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்யும். வீரர்களின் செயல்பாட்டை ஆராய்ந்து மத்திய அமைச்சகம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும். அந்த வகையில், தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் ஞானசேகரன் உள்ளிட்ட 18 பேருக்கு அர்ஜூனா விருதுகள் வழங்க மத்திய அரசுக்கு விளையாட்டுத்துறை அமைச்சகம் பரிந்துரை செய்திருந்தது. இந்நிலையில், இன்று தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் ஞானசேகரனுக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக டேபிள் டென்னிஸ் வீரரான சத்யன் ஞானசேகரன் கடந்த இரண்டு வருடங்களாக டேபிள் டென்னிஸ் துறையில் சிறந்து விளங்கி வருகிறார். ஆஸ்திரேலிய காமன் வெல்த் போட்டியில் கலந்துகொண்ட நான்கு பிரிவுகளில் மூன்று பதக்கங்களை வென்றுள்ளார். மேலும் ஆசியன் விளையாட்டில் முதல் முறையாக பதக்கம் வென்று இந்தியக்கு பெருமை சேர்த்தார்.

இது குறித்து சத்யன் ஞானசேகரன் கூறுகையில்,

இது மிகவும் மகிழ்ச்சியான தருணம் என்னுடைய நிண்ட நாட்கள் கணுவு தற்போது நிறைவேறியிருக்கிறது. சிறுவயதில் இந்த விருது எனக்கு கிடைத்ததுக்கு மிகவும் நான் பெருமை அடைகிறேன். என்னுடைய பெற்றோர் கோச் ராமன், நண்பர்கள் இவர்கள் அனைவருக்கும் இந்த விருதை சமர்பிக்கிறேன். இந்த விருது டேபிள் டென்னிஸ் டீம் மற்றும் தமிழகத்துக்கு கிடைத்த மிக பெரிய வெற்றியாக கருதுகிறேன். இதுவரை ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் விளையாட்டில் இந்தியா பதக்கம் வென்றது கிடையாது எனது அடுத்த இலக்கு ஒலிம்பிக்கில் வெற்றி பெறவேண்டும். கிரிக்கெட், கபடி உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு கிடைக்கும் வரவேற்பு டேபிள் டென்னிஸ்க்கு இல்லை என்று சொல்லாம். இனி வரும் காலங்களில் பள்ளி பருவத்தில் இருந்தே விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்கள் முன் வந்து விளையாட வேண்டும் என்று கேட்டுகொள்கிறேன் என்றார்.

மேலும் படிக்க