• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிறந்து 30 நாட்களே ஆன குழந்தைக்கு இருதய ஆபரேஷன்: ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனை புதிய சாதனை

September 20, 2018 தண்டோரா குழு

கோவை ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனையில் பிறந்து 30 நாட்களே ஆன குழந்தைக்கு இருதய ஆபரேஷன் செய்து புதிய சாதனை படைத்துள்ளது.

பிறந்து 30 நாட்களே ஆன மூன்று கிலோ எடையுள்ள குழந்தைக்கு மூச்சு திணறல் கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சைக்காக கோவை ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.அப்போது குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் மிகவும் அரிதான சிக்கலான இருதய நோய்,நுரையீரல் இணைப்போடு தொடர்புடையதாக இருந்தது தெரியவந்தது.ஆக்ஸிஜன் நிறைந்த ரத்தம்,இடது பக்கத்திற்கு செல்வதற்கு பதிலாக,மாறாக சென்று கொண்டிருந்தது.இத்தகைய சிக்கலில் உயிர் வாழ ஒரே வழி திறந்த நிலை இருதய அறுவை சிகிச்சை தான் என மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

இதற்கிடையில்,ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்டவுடன் குழந்தைக்கு இருதய செயலிழப்பு ஏற்பட்டது.குழந்தை வாழ்வதற்கான வாய்ப்புகள் குறைந்தது.இருதய நுரையீரல் தொடர்புகள் ஒரே சமயத்தில் செயலிழக்க தொடங்கியதால்,குழந்தைக்கு உடனடியாக இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இந்த அறுவை சிகிச்சை குழுவில்,குழந்தைகள் நல பிரிவு டாக்டர் விஜய் சதாசிவம்,டாக்டர் தியாகராஜமூர்த்தி,டாக்டர் சுஜித்,இருதய சிகிச்சை நிபுணர்கள் டாக்டர்கள் தேவபிரசாந்த்,டாக்டர் நரேந்திர மேனன் ஆகியோர் இருந்தனர்.

இந்நிலையில் இருதய அறுவை சிகிச்சைக்குப்பின்,குழந்தைக்கு இன்னும் பல சிரமங்கள் ஏற்பட்டன.இந்த சிக்கல் மிகவும் திறம்பட மேலாண்மை செய்யப்பட்டு, குழந்தை படிப்படியாக குணமடைய தொடங்கியது.குழந்தை சிகிச்சைக்குப்பின் வீடு திரும்பியதுடன்,வழக்கமான சாதாரண குழந்தைகளுக்கான இருதயத்தை போன்றே செயல்பட துவங்கியது.

மேலும் படிக்க