• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை SNS கல்லூரி நிர்வாக இயக்குனர் மீது பாலியல் புகார்

September 20, 2018 தண்டோரா குழு

கோவை SNS கல்லூரி நிர்வாக இயக்குனர் சுப்பிரமணியன்(64) என்பவர் அங்கு பணியாற்றும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் எழுந்த நிலையில் அது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை அடுத்த சரவணம்பட்டியில் எஸ்.என்.எஸ்.கல்வி நிறுவனம் உள்ளது.இக்கல்லூரியின் நிர்வாக இயக்குனர் சுப்ரமணியம்(64) இவரது அலுவலகத்தில் பணிபுரியும் பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்ததாக சொல்லப்படுகிறது.இதையடுத்து அப்பெண்,கல்லூரி நிர்வாக இயக்குனர் சுப்ரமணியம் தன்னிடம் அத்துமீறி நடந்து கொள்வதை செல்போன் கேமரா மூலம் ரகசியமாக படம் எடுத்துள்ளார்.

இதுசம்பந்தமாக பாதிக்கப்பட்ட பெண் கல்லூரி தலைமை நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் இதுவரை சம்பந்தப்பட்ட அதிகாரி மீது கல்லூரி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில்,அப்பெண் கோவை துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் தொந்தரவு கொடுத்த நிர்வாக இயக்குனர் சுப்ரமணியம் மீது நடவடிக்கை எடுக்குமாறும் தனக்கு பாதுகாப்பு வழங்குமாறும் புகார் அளித்துள்ளார்.இதையடுத்து இது குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இன்று அந்த புகாரை அந்த பெண் வாபஸ் பெற்றுள்ளார்.

மேலும் படிக்க