September 19, 2018
தண்டோரா குழு
யோகாகுரு பாபா ராம்தேவ் பதஞ்சலி நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிறுவனம் இயற்கை முறையில் பலசரக்குகளை, பல்பொருள் அங்காடி, ஆன்லைன் மற்றும் தனி தனியாக ஷோரூம்கள் அமைத்து இந்தியா முழுவதும் விற்பனை செய்து வருகிறது.
அந்நிறுவனத்தின் பொருட்கள் அனைத்தும் முற்றிலும் இயற்கை முறையில் தயாரிக்கப்படுகிறது என்று அடிக்கடி விளம்பரங்களில் கூறப்பட்டாலும் அண்மைக்காலமாக பதஞ்சலி நிறுவனத்தின் பொருட்கள் மீது அடுக்கடுக்கான குற்றசாட்டுகள் வந்து கொண்டு தான் இருக்கின்றன.
இந்நிலையில், பதஞ்சலி நிறுவனத்தின் ஓட்ஸ்யை வாடிக்கையாளர் ஒருவர் வாங்கியுள்ளார். இயற்கை முறையில் தயாரிக்கப்படும் பொருட்கள் என நம்பிவாங்கிய அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில், அவர் அந்த ஓட்ஸ் பாக்கெட்டை திறந்த போது அதில் மாவுப்பூச்சி இருந்துள்ளது. இதனைப் பார்த்து அவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.
மேலும் இந்த சம்பவம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த அந்த வாடிக்கையாளர், பதஞ்சலி நிறுவனத்துக்கு எதிராக நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக கூறியுள்ளார்.
ஏற்கனேவ, பதஞ்சலி நிறுவனம் மீது காலவதி தேதியை தவறாக அச்சடித்த குற்றச்சாட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.