September 19, 2018
தண்டோரா குழு
திமுகவுக்கு எதிராக வரும் 25ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்படும் என முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி,துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அவை, தி.மு.க.,விற்கு எதிராக மாவட்ட தலைநகரங்களில் கண்டன பொதுகூட்டம் நடத்தப்படும். இலங்கை தமிழர் படுகொலையில் கூட்டணி அரசாக இருந்த காங்கிரஸ் திமுகைவை தண்டிக்க வேண்டும். இனப்படுகொலையில் சம்பந்தப்பட்டவர்களை போர்க்குற்றவாளிகளாக்கி தண்டிக்கப்பட வேண்டும். இலங்கை ராணுவத்திற்கு தி.மு.க., காங்கிரஸ் உதவியதை ராஜபக்ஷே ஒப்புதல் வாக்குமூலம் தந்துள்ளார். என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.