• Download mobile app
20 May 2025, TuesdayEdition - 3387
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பெரியார் சிலை மீது காலணி வீசிய வழக்கறிஞர் ஜெகதீசன் மீது குண்டர் சட்டம்

September 19, 2018 தண்டோரா குழு

பெரியார் சிலை மீது காலணி வீசியதால் கைதான வழக்கறிஞர் ஜெகதீசன் மீது குண்டர் சட்டத்தில் அடைக்க சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.

சிறந்த சிந்தனையாளராக,சமூகப்புரட்சியின் வழிகாட்டியாக,புதிய சிந்தனைகளைத் தூண்டிய பத்திரிகையாளராக,பாமரருக்கும் பகுத்தறிவை வளர்த்த பேச்சாளராக, மூடநம்பிக்கைகளைப் போக்கிடும் ஆசானாகச் செயல்பட்ட தந்தை பெரியாரின் 140-வது பிறந்த நாள் செப்டம்பர் 17ம் தேதி கொண்டாடப்பட்டது.இதையடுத்து, சென்னை,அண்ணா சாலையில் சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலைக்கு பல்வேறு கட்சிகளின் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது.

இதற்கிடையில்,அப்போது அங்கு வந்த கிண்டி,ஈக்காட்டுத்தாங்கலைச் சேர்ந்த உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஜெகதீசன் திடீரென பெரியார் சிலை மீது காலணி வீசினார்.இதனால் அங்கு கூடியிருந்த தொண்டர்களும் பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்து அவரை சரமாரியாக தாக்கினர்.

இதையடுத்து,ஜெகதீசனைக் காவல்துறையினர் கைது செய்தனர்.இந்நிலையில்,பெரியார் சிலை மீது காலணி வீசியதால் கைதான வழக்கறிஞர் ஜெகதீசன் மீது குண்டர் சட்டத்தில் அடைக்க சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க