September 19, 2018
தண்டோரா குழு
முத்தலாக் நடைமுறையை தண்டனைக்குரிய குற்றமாக்கும் வகையிலான அவசர சட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
முத்தலாக்கை தண்டனைக்குரிய குற்றமாக கருதும் அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.மூன்று முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் நடைமுறைக்கு தடை விதிக்கும் வகையில்,முத்தலாக் நடைமுறைக்கு எதிராக 3 அவசர சட்டங்கள் மூலம் திருத்தம் கொண்டு வரப்படுகிறது.
அதன்படி,முத்தலாக் தடுப்பு சட்டத்தில் கைதானால் நீதிமன்றத்தில் ஜாமீன் பெறலாம்.முத்தலாக் வழங்கியபின் கணவன் மனைவி இடையே சமரசம் ஏற்பட்டால் அபராதம் செலுத்தி மீண்டும் சேரலாம்.முத்தலாக்கில் கணவன்,மனைவியின் குடும்பத்தினர் மட்டுமே புகார் அளிக்கலாம்.ஆகிய மூன்று முக்கிய திருத்தங்களுடன் இந்த அவசர சட்டம் நடைமுறைக்கு வர உள்ளது.