September 18, 2018
தண்டோரா குழு
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அந்நாட்டு அமைச்சர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகளின் சொகுசு கார்களை ஏலம் விட்டு,வருவாய் ஈட்டி பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
அன்மையில் பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றுள்ள இம்ரான்கான் மிக மோசமான பொரளாதார நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் அந்நாட்டின் பொருளாதரத்தை சீரமைக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.முதல்கட்டமாக ஆடம்பரமான பிரதமர் மாளிகையில் தங்காமல்,தனது சொந்த வீட்டில் வாழ்ந்து வருகிறார்.இதையடுத்து அமைச்சர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகளின் சொகுசு கார்களை விற்று பணம் ஈட்ட உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து ஏலம் விடும் நிகழ்ச்சி நேற்று இஸ்லாமாபாத்தில் நடைபெற்றது.அதில் 70 ஆடம்பர கார்கள் ஏலம் விடப்பட்டது. அதில் 8 புல்லட் புரூப் கார்கள் மற்றும் 4 மெர்சிடஸ்பென்ஸ் கார்கள் உள்ளிட்டவை அடங்கும்.இதே போல ஹெலிகாப்டர்களும் தனியாக வேறு ஒரு இடத்தில் ஏலத்தில் விடப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.இதன் மூலம் கிடைக்கும் வருமானம் அந்நாட்டின் பொருளாதாரத்திற்கு சிறிதளவு உதவும் என்று கருதுகின்றனர்.
அண்மையில் பாகிஸ்தான் மக்களிடையே உரையாற்றிய பிரதமர் இம்ரான் கான்,அரசியல்வாதிகள் மற்றும் மக்களின் மனநிலை மாற வேண்டும் என்றும்,நாம் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறோம் இதனை உடனடியாக மாற்ற வரவில்லை எனில்,பேரழிவை சந்திக்க நேரிடும் என்று குறிப்பிட்டார்.