• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் மூட்டை மூட்டையாக தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல்

September 18, 2018 தண்டோரா குழு

கோவையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 200 கிலோ மதிப்பிலான குட்கா,பான்மசலா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழக அரசு மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளின் உத்தரவின் பேரில் கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் தடை செய்யப்பட்ட பான்மசாலா குட்கா குறித்த ஆய்வினை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில் கோவை புலியகுளம் பகுதியில் உள்ள விநாயகர் கோவில் அருகே தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பதாக உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து காவல்துறை உதவியுடன் சம்பவ இடத்திற்கு சென்ற உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது குடியிருப்பை ஓட்டிய ஒரு வீட்டில் குட்கா,பான்மசாலா போன்ற தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை கண்டுபிடித்தனர்.மளிகைக் கடை நடத்தி வரும் சுயம்புராஜ் வீடு எனக்கூறி குடோனில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இது தொடர்பாக வீட்டின் உரிமையாளர் சுயம்புராஜிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.இதுகுறித்து உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் கூறுகையில்,சுமார் 200 கிலோ எடையுடைய குட்கா,பான்மசாலா போன்ற தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் இதன் மதிப்பு சுமார் 1.75 லட்சம் ரூபாய் எனவும் தெரிவித்தனர்.

பெங்களூரிலிருந்து தயாரிக்கப்பட்டு லாரி,ரயில்,பேருந்து மூலமாக கோவைக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகவும்,கர்நாடகவில் போதை பொருட்களுக்கு தடையில்லை என தெரிவித்த அதிகாரிகள் அதை தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

மேலும் படிக்க