September 18, 2018
தண்டோரா குழு
அமெரிக்க தனியார் விண்வெளி நிறுவனத்தின் மூலம் நிலவிற்கு பயணம் செல்லவுள்ள முதலாவது நபர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.வாழ்வில் ஒரு முறையாவது உலகின் அனைத்து இடங்களுக்கும் சுற்றுலா செல்ல வேண்டும் என்ற ஆசை பலருக்கும் உண்டு.இந்த ஆசையை மூலதனமாக வைத்து,ஸ்பேஸ் எக்ஸ் என்ற தனியார் விண்வெளி நிறுவனம்,2023ம் ஆண்டு சந்திரனுக்கு சுற்றுலா பயணிகளை அழைத்து செல்ல முடிவு செய்துள்ளது.
இந்நிலையில்,நிலவுக்கு சுற்றுலாப்பயணம் மேற்கொள்ளப்போகும் முதல் நபரை,ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.ஜப்பானின் ஆடை நிறுவனமான ஸோஸோவின் நிறுவனர் யுசாகு மேஸவா என்ற கோடீஸ்வரர் தான் நிலவிற்கு சுற்றுப்பயணம் செல்லவுள்ள முதல் பயணி ஆவார்.லாஸ் ஏஞ்சல்சில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலன் மஸ்க் இதை அறிவித்தார்.
ஜப்பானை சேர்ந்தவர் யுசாகு மாயிஸாகா. ரூ.21,000 கோடி சொத்துக்களுக்கு சொந்தகாரர்.42 வயதான யோசாகு,ஜப்பான் நாட்டின் கோடீஸ்வரர்கள் பட்டியலில்,18வது இடத்தில் உள்ளார்.ராக் பாடகராக வாழ்க்கையை துவங்கிய அவர் தற்போது ஆன்லைன் பேஷன் மால் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.இவரிடம் ஏராளமான விமானங்கள்,சொகுசு கப்பல்கள் உள்ளன.கடந்தாண்டு ரூ.770 கோடி செலவு செய்து ஒரு ஓவியத்தை வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.