• Download mobile app
01 May 2026, FridayEdition - 3733
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வைரலாகும் தல அஜித்தின் விசுவாசம் படப்பிடிப்பு புகைப்படங்கள் !

September 18, 2018 தண்டோரா குழு

வீரம்,வேதாளம்,விவேகம் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் சிவா – நடிகர் அஜித் கூட்டணியில் உருவாகி வரும் படம் விஸ்வாசம்.இப்படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தில் அஜித்துடன் பில்லா,ஏகன்,ஆரம்பம் ஆகிய படங்களில் நடித்த லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்து வருகிறார்.இப்படத்தில் டாக்டராக நடிப்பதாக கூறப்படுகிறது.விசுவாசம் படத்தில் அஜித்,நயன்தாரா ஆகியோருடன் தம்பிராமையா,விவேக்,யோகி பாபு,ரோபோ சங்கர் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்தது.

இதற்கிடையில் அண்மையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.இந்நிலையில்,தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் என சில புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றது.

மேலும் படிக்க