September 18, 2018
தண்டோரா குழு
கோவையை அடுத்த ஆர்.எஸ்.புரம் பகுதியில் அனைத்திந்திய சுற்றுலா வாகன நலச்சங்கத்தின் சார்பில் கூட்டம் இன்று நடைபெற்றது.இந்த சங்கம் சார்பில் வருடந்தோறும் ஓட்டுனர் தின விழா கடைபிடிக்கப்படுகிறது.இந்நிலையில் இந்த வருடத்திற்கான ஓட்டுனர் தின விழா கொண்டாட்டங்கள் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழகத்தில் இருந்து அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த ஓட்டுனர்கள் கலந்துக் கொண்டனர்.
இந்தவிழாவில்,சிறப்பாக பணிபுரிந்த ஓட்டுனர்கள் மற்றும் சமூக பணியில் ஈடுபட்டு வரும் ஓட்டுனர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.இந்த விழாவில் ரத்த தான முகாம் மற்றும் இலவச கண் சிகிச்சை முகாம்கள் நடைபெற்றன.குறிப்பாக முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், பெட்ரோல்,டீசல் விலை உயர்வால் ஓட்டுனர்கள் பெரிதும் பாதிக்கபட்டுள்ளதாகவும்,எனவே அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.