September 18, 2018
தண்டோரா குழு
கோவை அரசு கலைக்கல்லூரி விடுதியில் அடிப்படை வசதிகளை செய்து தராத நிர்வாகத்தை கண்டித்து மாணவர்கள் நுழைவு வாயிலில் அமர்ந்து இன்று போராட்டம் நடத்தினர்.
கோவை அரசு கலைக்கல்லூரியில் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.பெரும்பாலான மாணவர்கள் மற்ற மாவட்டங்களில் இருந்து விடுதியில் தங்கி படித்து,பகுதி நேர வேலை பார்த்து வருகின்றனர்.அரசு கலைக்கல்லூரி சார்பாக பந்தய சாலையில் செயல்பட்டு வரும் மாணவர்கள் விடுதியில் 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.
இந்நிலையில் விடுதியில் தரமற்ற உணவு மற்றும் கழிவறை வசதிகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாகக் கூறி,இரண்டு மாதத்திற்கு முன்பு கல்லூரி முதல்வரிடம் புகராளித்துள்ளதாக தெரிகிறது.மேலும் விடுதி வார்டன் இரு மாணவர்களை தாக்கியதாகவும் புகார் தெரிவித்துள்ளனர்.இப்பிரச்சனைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் அரசு கலைக்கல்லூரி முதல்வர் காலம் தாழ்த்தி வருவதாகக் கூறி நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்லூரி நூழைவாயிலில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.