September 17, 2018
தண்டோரா குழு
கோவை அடுத்த க.க சாவடியில் போலீஸ் வேடத்தில் இரவில் வாகன சோதனையில் ஈடுபட்ட சிலர் ரூ.2.5 கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலக்காடு பத்திரிபாலம் பகுதியை சேர்ந்த கால்நடை வியாபாரிகளான பசீர்(47),மன்சூர்(33),சுக்கூர்(23) ஆகியோர் ஆந்திராவிலிருந்து வியாபாரம் முடித்து கேரளாவை நோக்கி காரில் நேற்று வந்துக் கொண்டிருந்தனர்.இந்நிலையில் அதிகாலை 4 மணியளவில் வாளையார் சோதனை சாவடிக்கு முன் உள்ள க.க சாவடி என்ற பகுதியில் காவல்துறை அதிகாரிகள் போல் வேடமிட்ட 5 பேர் காரை தடுத்து நிறுத்தி வாகனத்தை சோதனை செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளனர்.
இதனையடுத்து,காரில் ஏறிய அவர்கள் காரில் இருந்த 3 பேரின் கையிலும் அசலான விலங்கை மாட்டி முகத்தை மூடி மிளகாய்பொடி தூவி உள்ளனர்.பின்னர் அவர்களை வாளையார் காட்டில் தள்ளிவிட்டுவிட்டு வாகனத்துடன் 2.5லட்சம் ரூபாய் மற்றும் 4 கைப்பேசிகள் ஏடிஎம் கார்ட் போன்றவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
வாளையாரில் தள்ளிவிடப்பட்ட வியாபாரிகள் கேரளா வாளையார் காவல்நிலையத்தில் தொடர்பு கொண்டனர்.வாளையார் காவலர்கள் மற்றும் க.க சாவடி காவலர்கள் மதியம் வரை தொடர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.அப்போது,அவர்களுடைய கார் மட்டும் வாளையார் அருகில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து,வழக்கு பதிவு செய்த க.க சாவடி போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.