• Download mobile app
23 Aug 2026, SundayEdition - 3847
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிகை ராதிகா ஆப்தேவிற்கு லிப்டில் பாலியல் தொல்லை கொடுத்த நடிகர்…!

September 17, 2018 தண்டோரா குழு

தமிழில் பிரகாஷ் ராஜ் நடித்த தோனி படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ராதிகா ஆப்தே.அதன்பின் கார்த்தியுடன் ஆல் இன் ஆல் அழகுராஜா,ரஜினியுடன் கபாலி போன்ற படங்களில் நடித்துள்ளார்.

பாலிவுட்டில் தற்போது முன்னணி நாயகியாக உருவெடுத்துள்ள இவர் அவ்வபோது சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.இந்நிலையில்,ராதிகா ஆப்தே தற்போது நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பில் அவருக்கு முதுகில் காயம் ஏற்பட்டுள்ளது.இதனால் கடுமையான வலியால் துடித்த ராதிகாவிடம்,படப்பிடிப்பு முடிந்த பின்னர் அவருடன் சேர்ந்து நடித்த நடிகர் ஹோட்டலில் எல்லைமீற முயற்சித்துள்ளார்.

இதையடுத்து, ராதிகா ஆப்தே இதனை வெளிப்படையாக ஊடகங்களிடம் பகிர்ந்துள்ளார்.மேலும்,ஹாலிவுட் பிரபலங்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து தைரியமாக வெளியே சொல்கிறார்கள்.ஆனால்,பாலிவுட்டில் உள்ளவர்களுக்கு இன்னும் அந்த துணிச்சல் வரவில்லை என்று நடிகை ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க